உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை


உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
x

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில் வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, காவல்துறை அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் உரிய அடிப்படை வசதிகள் உள்ளனவா என்றும், பதற்றமான, மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் கண்டறிய வேண்டும்.

ஆயத்த பணிகள்

மேலும் இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய இடம், வாக்கு எண்ணிக்கை மையம், வாக்குச்சீட்டுகள் அச்சடிக்க வேண்டிய அச்சகங்கள், மண்டல வரைபடம், தரை வரைபடம் ஆகியவற்றை கூட்டாக ஆய்வு செய்து அனைத்து முன்னேற்பாடுகளும் கொரோனா விதிமுறைகளுக்குட்பட்டு தயார் நிலையில் தேர்தலுக்காக ஆயத்த பணிகளை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஜோதி, மாவட்ட ஊராட்சிகள் அலுவலக செயலாளர் குருசாமி, விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story