10-ம் வகுப்பு மாணவி கடத்தல்


10-ம் வகுப்பு மாணவி கடத்தல்
x
தினத்தந்தி 5 Aug 2021 5:16 PM GMT (Updated: 2021-08-05T22:46:35+05:30)

விழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டாா்.

விழுப்புரம், 

விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை புதுச்சேரி மேட்டுப்பாளையம் நேரு வீதியை சேர்ந்த ரத்தினகுமார் மகன் மணிமாறன் (32) என்பவர் கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற மணிமாறனையும் தேடி வருகின்றனர்.

Next Story