வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்


வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
x

வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொண்டி, 
திருவாடானை தாலுகாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பணிகளை ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சேக் மன்சூர் ஆய்வு செய்தார். அவர் சாலையில் இரு சக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் சென்ற 7 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார்.பின்னர் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா துண்டு பிரசுரங்களை வழங்கி அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போது பஸ் நிலையம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பொதுமக்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை பார்த்த வருவாய் கோட்டாட்சியர் வங்கிக்குள் சென்று ஆய்வு செய்தார். அங்கு கொரோனா தடுப்பு நடைமுறைகள் பின்பற்றாமல் இருப்பதை அறிந்த அவர் வங்கிக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தார்.மேலும் அந்த தொகையை உடனடியாக சம்பவ இடத்திலேயே வசூல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதியோர் உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் கேட்டு மனுக்கள் அளித்து இருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். அவருடன் தாசில்தார் செந்தில்வேல் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி, துணை தாசில் தார்கள் கோகிலா, சேதுராமன், வட்ட வழங்கல் அலுவலர் வரதன் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story