அகதிகள் முகாமை அதிகாரி ஆய்வு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 5 Aug 2021 6:17 PM GMT (Updated: 2021-08-05T23:47:38+05:30)

அகதிகள் முகாமை அதிகாரி ஆய்வு செய்தார்.

லாலாபேட்டை
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் இரும்பூதி பட்டியில் அகதிகள் முகாம் உள்ளது. இதில் 143 குடும்பங்களை சேர்ந்த 450 பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் முகாமை பார்வையிடும் பொருட்டு நேற்று காலை சென்னையிலிருந்து இலங்கை அகதிகள் மறுவாழ்வு திட்ட இயக்குனர் ஜெசிந்தா லாரன்ஸ் வந்தார். பின்னர் அவர் முகாமை பார்வையிட்டு முகாமில் வசிப்பவர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர்கள் தங்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதிகள் கூடுதலாக செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட ஜெசிந்தா லாரன்ஸ் கேரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை நல அலுவலர் சந்தியா, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகுடேஸ்வரன் மற்றும் வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அதிகாரி உள்படபலர் உடனிருந்தனர்.

Next Story