புதிதாக 16 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதிதாக 16 பேருக்கு கொரோனா
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் 16 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 6 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 68 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 171 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 992 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,002 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3,901 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 4,011 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com