புதிதாக 21 பேருக்கு கொரோனா


புதிதாக 21 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Aug 2021 1:55 AM IST (Updated: 6 Aug 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 21 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 9 பேரும் என நேற்று புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். ஆனால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 102 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 234 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 1,205 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,101 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story