

திருவலம்
திருவலம் அருகே உள்ள எஸ்.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 36), விவசாயி. இவர் வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார். உடனடியாக அவரை வீட்டிலுள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.