கடையத்தில் இந்து முன்னணி, பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


கடையத்தில் இந்து முன்னணி, பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2021 8:36 PM GMT (Updated: 2021-08-06T02:06:38+05:30)

கடையத்தில் இந்து முன்னணி, பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையம்: 
கடையம் சின்ன தேர் திடலில் இந்து முன்னணி, பா.ஜனதா சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வக்கீல் சாக்ரடீஸ் தலைமை தாங்கினார். கடையம் அருகே புலவனூரில் கடந்த மாதம் 28-ந்தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது இந்து முன்னணி கொடி அகற்றப்பட்டதை கண்டித்தும், ஆக்கிரமிப்புகளை முறையாக வருவாய் துறையினர், போலீசார் அகற்ற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் பேசினர். பா.ஜனதா மாவட்ட தலைவர் ராமராஜ் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் அன்புராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட செயலாளர்கள் அருள்செல்வம், சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர்கள் சரவணன், ரத்தினகுமார், இந்து முன்னணி புலவனூர் பொறுப்பாளர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story