பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம-அடி


பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம-அடி
x
தினத்தந்தி 6 Aug 2021 2:32 AM IST (Updated: 6 Aug 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம-அடி கொடுத்தனர்.

பெலகாவி: பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா பைலூரு கிராமத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டையொட்டி ஒரு பள்ளி உள்ளது. அங்கு ஆசிரியராக சுரேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். பள்ளியின் அருகே அந்த பெண் வசிப்பதால், அவருடன் சுரேசுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் செல்போன் எண்ணையும், சுரேஷ் வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அப்பெண்ணுக்கு, சுரேஷ் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் ஆத்திரமடைந்தார்.

இந்த நிலையில், நேற்று காலையில் அந்த பெண், கிராம மக்களுடன் பள்ளிக்கு சென்று ஆசிரியர் சுரேசிடம் ஆபாச குறுந்தகவல் அனுப்பியது குறித்து கேட்டு சண்டை போட்டார். மேலும் சுரேசை அந்த பெண் செருப்பால் அடித்தார். கிராம மக்களும் சேர்ந்து அவரை அடித்து, உதைத்து தாக்கினார்கள். தகவல் அறிந்ததும் கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் கிராம மக்கள் அங்கிருந்து சென்றனர்.

Next Story