ஹாசன் நர்சிங் கல்லூரியில் படித்து வரும் கேரள மாணவிகள் 21 பேருக்கு கொரோனா
ஹாசனில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வரும் கேரள மாணவிகள் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
ஹாசன்: ஹாசனில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வரும் கேரள மாணவிகள் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
நெகட்டிவ் சான்றிதழ்
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கிருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆனாலும் கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வருவது இ்ல்லை. இதனை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இந்த நிலையில் ஹாசனில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வரும் கேரள மாணவிகள் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
21 மாணவிகளுக்கு கொரோனா
ஹாசன் டவுன் கே.ஆர்.புரம் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் கேரள மாணவிகளும் படித்து வருகின்றனர். சமீபத்தில் அந்த கல்லூரியில் படித்து வரும் 21 கேரள மாணவிகள், கேரளாவுக்கு சென்று விட்டு ஹாசனுக்கு திரும்பி இருந்தனர்.
இந்த நிலையில் 21 மாணவிகளுக்கும் திடீரென உடல்நலக்குறைவு உண்டானது. இதனால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 21 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர்கள் விடுதியில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்த சில மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story