அம்பையில் வாடகை பாக்கி செலுத்தாத கடைக்கு ‘சீல்’ வைப்பு

அம்பையில் வாடகை பாக்கி செலுத்தாத கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
அம்பை:
அம்பை சந்தை பஜார் மெயின் ரோட்டில், அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட கடையை அப்பகுதியை சேர்ந்த சங்கர நாராயணன் என்பவர் வாடகைக்கு ஏற்று நடத்தி வந்தார். அந்த கடைக்கு 6 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை பாக்கியை செலுத்தாமல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவில் நிர்வாகம் மூலம் பல முறை கேட்டும் வாடகை கொடுக்காததால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொரடப்பட்டு, அதன்படி இந்து அறநிலையத்துறை சார்பில் நேற்று அந்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்து அறநிலையத்துறை இணை இயக்குனர் சங்கர், நிர்வாக அதிகாரிகள் கிருஷ்ணவேணி, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் சென்று, அந்த கடைக்கு ‘சீல்’ வைத்து அதற்கான நோட்டீசை ஒட்டினர்.
Related Tags :
Next Story






