பழவூர் அருகே விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பழவூர் அருகே விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2021 9:27 PM GMT (Updated: 2021-08-06T02:57:21+05:30)

பழவூர் அருகே விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வடக்கன்குளம்:
பழவூர் அருகே இருக்கன்துறையில் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அங்கு வைக்கப்படும் வெடிகளால் அருகிலுள்ள கிராம வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. மேலும் அதிக பாரம் கொண்ட கற்களை லாரிகளில் அவ்வழியாக எடுத்துச் செல்வதால் சாலைகளும் பழுதடைகிறது. இதுதவிர அதிக ஆழம் தோண்டப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது. 

இதை கண்டித்தும், கல் குவாரிகளை தடை செய்ய வேண்டும், புதிய கல் குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியும் இருக்கன்துறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ராதாபுரம் தாலுகா உறுப்பினர் முகமது பயாஸ் முன்னிலை வகித்தார். தாலுகா உறுப்பினர்கள் சாண்ரோஸ், கதிரவன், முத்துக்குமார், ஆனந்தராஜ் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story