நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

பாளையங்கோட்டை அருகே நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே முத்தூர் பகுதியில் கடந்த மாதம் கோவில் கொடைவிழா நடந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பூபதி சுபாஷ், சூரியா, சுந்தர் ஆகியோரிடம் சிவந்திபட்டி பகுதியை சேர்ந்த சுபாஷ், முத்தூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 27) மற்றும் அவரது கூட்டாளிகள் தகராறு செய்துள்ளனர்.

இதனை சுபாஷ் தந்தையிடம், பூபதி சுபாஷின் தந்தை சென்று கண்டிக்குமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பூபதி சுபாஷ் வீட்டை சூறையாடி, அங்கிருந்தவர்களை தாக்கி ரூ.2 லட்சத்தையும், 7 பவுன் நகைகளையும் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி உள்பட 2 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்த வேல்முருகனை (21) நேற்று போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com