கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம்
காரியாபட்டி தாலுகாவில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சட்டநாதன் எஸ்.கல்லுப்பட்டிக்கும், சுதந்திர போஸ் அழகியநல்லூருக்கும், சரஸ்வதி கம்பிக்குடிக்கும், கரைேமலு வக்கணாங் குண்டுக்கும், சோலை பிரியா ஆவியூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல சந்திரமோகன் நந்திக்குண்டுக்கும், ரஞ்சித் குமார் வழுக்க லொட்டிக்கும், மேனகா பாம்பாட்டிக்கும், விஜய் பாண்டியன் ஆமைபெருக்கிக்கும், நாகராஜ் மாங்குளத்திற்கும், ராமேஸ்வரி பந்தனேந்தலுக்கும், நம்பிராஜன் முடுக்கன்குளத்திற்கும், முத்துமீனாள் சொக்கனேந்தலுக்கும், சித்திக் அலி திம்மபுரத்திற்கும், நிர்மலா பாப்பணத்திற்கும், பபிதா காரியாபட்டிக்கும், காசிமாயன் கட்டுகுத்தகைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல கரிசல்குளம், தெய்வமணி மல்லாங்கிணறுக்கும், வெங்கடேஸ்வரன் அயன் ரெட்டியபட்டிக்கும், மூகாம்பிகை அரியனேந்தலுக்கும், அழகர் ஏ. நெடுங்குளத்திற்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
காரியாபட்டி தாலுகாவில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story