செங்கல்பட்டு, 186 பேருக்கு ரேஷன்கார்டு
சிங்கப்பெருமாள் கோவில் கூட்டுறவு வங்கியில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் விழா நடந்தது. இதற்கு சிங்கப்பெருமாள் கோவில் பகுதி தி.மு.க. செயலாளர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் கூட்டுறவு வங்கியில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் விழா நடந்தது. இதற்கு சிங்கப்பெருமாள் கோவில் பகுதி தி.மு.க. செயலாளர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், மகளிர் அணி செயலாளர் கலைவாணி முன்னிலை வகித்தனர். வங்கி செயலாளர் செண்பகவள்ளி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சந்தானம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கார்த்திக், மாவட்ட பிரதிநிதி அஞ்சூர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு 186 பேருக்கு புதிய ரேஷன்கார்டுகளை வழங்கினார்கள்.
விழாவில் ஒரகடம் சிலம்புச்செல்வன், வட்ட வழங்கல் அலுவலர் வீரமணி, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story