சினிமாவில் 30 ஆண்டுகள்; வாழுங்கள், வாழ விடுங்கள் நடிகர் அஜித்குமார் அறிக்கை
சினிமாவில் 30 ஆண்டுகள்; வாழுங்கள், வாழ விடுங்கள் நடிகர் அஜித்குமார் அறிக்கை.
சென்னை,
நடிகர் அஜித்குமார் திரையுலகுக்கு வந்து 29 ஆண்டுகள் முடிந்து 30-வது ஆண்டு தொடங்குகிறது. இதையடுத்து அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டுவிட்டரில் ஹேஷ்டேக்கும் டிரெண்டிங் ஆகிறது. அதில் அஜித் நடித்த படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
சினிமாவில் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி அஜித்குமார் வெளியிட்டுள்ள் அறிக்கையில், ''ரசிகர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையாளர்கள் ஆகிய அனைவரும் ஒரே நாணயத்தின் 3 பகுதிகள். ரசிகர்களிடம் இருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடம் இருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் பாரபட்சம் இல்லாத விமர்சனங்களையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். வாழுங்கள், வாழ விடுங்கள். நிபந்தனையற்ற அன்பு எப்போதும்’’ என்று கூறியுள்ளார்.
அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஒரு சண்டை காட்சி மட்டும் பாக்கி உள்ளது. அதை படமாக்க அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் வெளிநாடு செல்ல உள்ளனர்.

Related Tags :
Next Story