புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மணி, தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சண்முகராஜா, நிர்வாகிகள் கோவிந்தராஜ், அர்ஜூனன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதேபோன்று பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, ஏரியூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், மாரண்டஅள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க கூட்டமைப்பினர், விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story