அஞ்செட்டியில் மயான வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை

அஞ்செட்டியில் மயான வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 6 Aug 2021 9:49 PM IST (Updated: 6 Aug 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டியில் மயான வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டியில் மயான வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலைமறியல்
அஞ்செட்டி தாலுகா அத்திமரத்தூர் கிராம மக்கள் நீண்ட காலமாக தங்களது கிராமத்திற்கு மயான வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே அத்திமரத்தூர் பொது மக்கள் 50-க்கும் மேற்பட்வர்கள் நேற்று திடீரென அந்த பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
மறியலுக்கு ஊர்க்கவுண்டர் ராஜன் தலைமை தாங்கினார். சரவணன் முன்னிலை வகித்தார். தகவல் அறிந்த அஞ்செட்டி தாசில்தார் தெய்வநாயகி, துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அஙகு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story