கிணறு வெட்டிய போது தலையில் கல் விழுந்து தொழிலாளி பலி
ஊத்தங்கரை அருகே கிணறு வெட்டிய போது தலையில் கல் விழுந்து தொழிலாளி பலியானார்.
கல்லாவி:
ஊத்தங்கரை அருகே உப்பாரப்பட்டி ஜோதி நகரை சேர்ந்த தொழிலாளி பொன்னுசாமி (வயது 70). இவர் பெரிய கனகம்பாடி பகுதியில் ஒரு கிணற்றில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கிரேன் மூலம் கிணறு வெட்டிய கற்கள் மேலே கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு கல் கிணற்றுக்குள் விழுந்தது. இதில் பொன்னுசாமி தலையில் அந்த கல் விழுந்தது. படுகாயம் அடைந்த பொன்னுசாமி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story