மூங்கில்துறைப்பட்டு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மூங்கில்துறைப்பட்டு அருகே  இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 Aug 2021 4:32 PM GMT (Updated: 2021-08-06T22:02:46+05:30)

மூங்கில்துறைப்பட்டு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சப் கலெக்டர் விசாரணை

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணியரசு மனைவி சிந்து(வயது 20). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நவுனிகா என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடபொன்பரப்பி போலீசார் தூக்கில் தொங்கிய சிந்துவின் உடலை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தீராத வயிற்று வலியால் சிந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. என்றாலும் திருமணமாகி 2-வருடங்களே ஆவதால் சிந்துவின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story