மாரியம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது
ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது. அங்கு ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
ஊட்டி
ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது. அங்கு ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
இதையொட்டி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் காட்டேரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவலை தடுக்க தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்
தமிழிலில் அர்ச்சனை
தமிழக அரசின் உத்தரவுப்படி ஊட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று முதல் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட்டு உள்ளது. தமிழில் அர்ச்சனை செய்யும் பூசாரி பெயர், செல்போன் எண் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த 2 தகவல் பலகைகள் கோவில் வளாகம், மற்றும் வெளியில் பொருத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் முத்துராமன் கூறும்போது, நீலகிரியில் முதல் கட்டமாக ஊட்டி மாரியம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்ய விரும்பினால் அர்ச்சனை செய்துகொள்ளலாம். படிப்படியாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிற கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.
Related Tags :
Next Story