கடையை உடைத்து திருட்டு


கடையை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 6 Aug 2021 4:52 PM GMT (Updated: 2021-08-06T22:22:53+05:30)

கடையை உடைத்து திருட்டு நடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் வெளிபட்டினம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 33). இவர் ராமநாதபுரம் மகர்நோன்பு பொட்டல் அருகில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையின் உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story