மக்களை தேடி மருத்துவம்
மக்களை தேடி மருத்துவம் நிகழ்ச்சி நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடிகிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை சேர்மன் வேலுச்சாமி தலைமை தாங்கினார். எஸ்.தரைகுடி ஊராட்சி தலைவர் முனியசாமி வரவேற்றார்.பரமக்குடி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் நேர்முக உதவி யாளர் ரகுபதி, வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், உச்சிநத்தம் மருத்துவர் கற்பக காயத்ரி, எஸ்.தரைகுடி ஜமாத் தலைவர் முகம்மது அபுபக்கர், கடலாடி தாசில் தார் சேகர், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல்ஜாமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ வாகனத்தை மாவட்ட துணைச்சேர்மன் வேல்சாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூபதி, காங்கிரஸ் வட்டார தலை வர்கள் அப்துல் சத்தார், தனசேகரன், ஒன்றிய கவுன்சிலர் குஞ்சரம் முருகன், செவல்பட்டி கூட்டுறவு தலைவர் பால்பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச்செழியன், ஆர்.சி.புரம் தி.மு.க. கிளைச்செயலாளர் பிரான்சிஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story