மீனவர்கள் கருத்துகேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும்
மீனவர்கள் கருத்துகேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பனைக்குளம்,
மத்திய அரசு கொண்டுவரவுள்ள தேசிய கடல் மீன் வள மசோதா தமிழ்நாட்டின் மீனவர்களை அச்சுறுத்தும் வகையிலும் தமிழ்நாடு மீனவர்களை எதிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் நவாஸ்கனி எம்.பி., மத்திய மீன்வளத்துறை மந்திரியை சந்தித்து மசோதாவை கொண்டு வருவதற்கு முன் முழுமையான மற்றும் முறையான மீனவர்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி தமிழ்நாடு மீனவர் களின் அச்சங்களை நீக்கி, மீனவர்களின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் அம்சங்களை நீக்கி, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர் பிரதிநிதிகள் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் சின்னத்தம்பி, டி.எப்.எப். ஒருங்கிணைப் பாளர் பாம்பன் கனிஷ்டன், ஒருங்கிணைப்பாளர் அன்பு, ராயப்பன், செழியன் ஆகியோரை மத்திய மந்திரியிடம் அழைத்துச்சென்று நவாஸ்கனி எம்.பி. மீனவர்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தார்.
Related Tags :
Next Story