காவலர் பணிக்கான 2 ம் கட்ட உடற்தகுதியில் 442 பேர் தேர்வு

2ம் கட்ட உடற்தகுதியில் 442 பேர் தேர்வு
காவலர் பணிக்கான 2 ம் கட்ட உடற்தகுதியில் 442 பேர் தேர்வு
Published on

வேலூர்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக 2 ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 26-ந் தேதி தொடங்கியது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடந்தது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2-ம் கட்ட தேர்வு நடைபெற்று வருகிறது.

3-வது நாளாக நேற்று நடந்த 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒருவருக்கு கொரோனா என்பதால் அவர் வரவில்லை. 499 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் கயிறு ஏறுதலில் 46 பேரும், நீளம் தாண்டுதல், ஓட்டம் உள்ளிட்டவற்றில் 11 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 442 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அடுத்தகட்டமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com