காரைக்குடி,
காரைக்குடியில் ெகாரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை அழகப்பா பல்கலைக்கழக நிர்வாக குழு உறுப்பினர் குருமூர்த்தி தொடங்கி வைத்தார். இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் நல்லாசிரியர் பகீரத நாச்சியப்பன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். ஆனந்தராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். நிகழ்ச்சியில் இந்திய செஞ்சிலுவை துணை தலைவர் சுந்தரராமன், அழகப்பா பல்கலைக்கழக செஞ்சிலுவை மண்டல ஒருங்கிணைப்பாளர் விநாயக மூர்த்தி, மாநில அமைப்பாளர் முருகுபாண்டியன், சங்க பொருளாளர் ராமமூர்த்தி, சங்க நிர்வாகிகள் சுவாமி செந்தில்நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா வரவேற்றார். முகாமிற்கான ஏற்பாடுகளை சுதா, சிலம்புச்செல்வி, சாலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அனிதா, வெளிப்புற செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பிரியா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கல்லூரி இளஞ்செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.