முள்ளங்குறிச்சி அரசுப்பள்ளி மாணவர்கள் தர்ணா
பள்ளி வளாகத்தில் உள்ள ஆலமரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து முள்ளங்குறிச்சி அரசுப்பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி, ஆக.7-
பள்ளி வளாகத்தில் உள்ள ஆலமரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து முள்ளங்குறிச்சி அரசுப்பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலமரம்
கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சியில் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 450-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் 50 ஆண்டுகள் பழமையான அடர்ந்த ஆலமரம் உள்ளது. இந்த மரத்தடியில் மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அமர்ந்து படிப்பது வழக்கம்.
மேலும் மதிய உணவை இந்த மரத்தடியில் ஒன்றாக அமர்ந்து மாணவர்கள் சாப்பிட்டு மகிழ்வர். இந்த மரத்தால் கோடைகாலங்களில் வெயில் தாக்கம் இல்லாமல் காற்றோட்டத்துடன் மாணவர்கள் படித்து வந்தனர். இந்நிலையில் பள்ளிக்கான ஆய்வகக் கட்டிடம் கட்டுவதற்காக இந்தஆலமரத்தை வெட்டி அகற்ற முயற்சிக்கப்பட்டது.
தர்ணா போராட்டம்
இதை அறிந்த அந்தப்பள்ளியில் படிக்கும் சுற்றுவட்டார கிராம மாணவர்கள் அந்தமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளி வளாகத்தின் மற்ற பகுதியில் ஆய்வகம் கட்ட வலியுறுத்தியும் பள்ளி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கறம்பக்குடி துணை தாசில்தார் ராமசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் அங்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தி ஆய்வகம் கட்டுவது குறித்து முடிவு செய்வது எனவும், அதுவரை ஆலமரம் வெட்டபடாது எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Related Tags :
Next Story