சிவகங்கை,
சிவகங்கை நகரில் நேற்று காலையில் வெயில் கொளுத்தியது. திடீரென்று மாலை 3 மணி அளவில் வானில் கருமேக கூட்டம் காணப்பட்டது.தொடர்ந்து சாரலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. அது சுமார் 2 மணி நேரம் பலத்த மழையாக நீடித்தது. இந்த மழையினால் சிவகங்கை நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் கரை புரண்டு ஓடியது. சிவகங்கை காந்தி வீதியில் கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பியதால் மழை நீருடன் சாக்கடை தண்ணீரும் கலந்து வீதியில் ஓடியது. இந்த மழையினால் சிவகங்கை பகுதியில் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. மேலும் கண்மாய் மற்றும் ஊருணிகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்தது. காரைக்குடியில் நேற்று மாலை கருமேக கூட்டம் காணப்பட்டது.ஆனால் எதிர்பார்த்தப்படி மழை பெய்யவில்ைல.