வாணியம்பாடியில் 2 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல். ஒருவர் கைது


வாணியம்பாடியில் 2 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல். ஒருவர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2021 12:16 AM IST (Updated: 7 Aug 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

2 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நியூடெல்லி பகுதியிலிருந்து ஆந்திரா மாநிலத்துக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நியூடெல்லி பகுதியிலிருந்து மினி லாரி ஒன்று வேகமாக காதர்பேட்டை நோக்கி வந்தது. சந்தேகத்தின் பேரில் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரியில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து லாரியில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை, மினி லாரியுடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டெல்லியை சேர்ந்த அன்னு என்ற அக்பர்பாஷாவை கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அன்னுவை தனிப்படை போலீசார், வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நேற்று முன்தினம் அதே பகுதியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று 2 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story