புதுச்சேரியில் கொரோனாவுக்கு பெண் பலி


புதுச்சேரியில் கொரோனாவுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 7 Aug 2021 12:51 AM IST (Updated: 7 Aug 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 88 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனாவுக்கு பெண் பலியானார்.

புதுச்சேரி, ஆக.7-
புதுச்சேரியில் 88 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனாவுக்கு பெண் பலியானார்.
88 பேருக்கு தொற்று
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 836 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 88 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 421 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 103 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 179 பேர், வீடுகளில் 693 பேர் என 872 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
பெண் பலி
ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த அரியாங்குப்பம் திரவுபதி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த 58 வயது பெண் பலியானார். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,799 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் தொற்று பாதிப்பு 1.51 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும்,  குணமடைவது 97.80 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 20 பேரும், பொதுமக்கள் 3 ஆயிரத்து 502 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 
1 More update

Next Story