சாலை விபத்தில் வாலிபர் பலி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 7 Aug 2021 1:23 AM IST (Updated: 7 Aug 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நொய்யல்
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பெரிய கண்டிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் தீபன் (வயது 19). இவரும், இவரது நண்பர்களான மணிகண்டன் (20), பிரவீன்பாரதி (20) ஆகிய 3 பேரும் புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் 3 பேரும் வேலைக்கு புறப்பட்னர். அப்போது பிரவீன்பாரதிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தீபன் ஓட்டினார். மணிகண்டன் நடுவிலும், பிரவீன் பாரதி பின்னாலும் அமர்ந்திருந்தனர்.
 புகளூர் பசுபதி நகர் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த சாலை விபத்தில் வாலிபர்கள் 3 ேபரும் படுகாயம் அடைந்தனர்.
 அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் பாரதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்த வடிவேல் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story