கொரோனாவுக்கு பெண் பலி


கொரோனாவுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 7 Aug 2021 2:30 AM IST (Updated: 7 Aug 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு பெண் பரிதாபமாக இறந்தார்.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 29 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேரும் நேற்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 19 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 84 வயதுடைய முதியவர் ஒருவரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 101 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 247 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 1,269 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,112 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
1 More update

Next Story