நாமக்கல் அருகே சிறுமி பலாத்காரம்; 3 பேர் கைது


நாமக்கல் அருகே  சிறுமி பலாத்காரம்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2021 2:31 AM IST (Updated: 7 Aug 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே சிறுமி பலாத்காரம்; 3 பேர் கைது

நாமக்கல்:
நாமக்கல் தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார். இதுகுறித்து அவருடைய பெற்றோர் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை, 17 வயது சிறுவர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்ததோடு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 
அதைத்தொடர்ந்து சிறுமியை மீட்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவரை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக ரஞ்சித்குமார் (வயது 29), விவேக் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 More update

Next Story