குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் நேற்று 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
Published on

நெல்லை:

மானூரை அடுத்த கம்மாளன்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் சரவணன் என்ற ஏட்டையா சரவணன் (வயது 29). இவர் கொலை மற்றும் கொலைமுயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். எனவே இவரை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதையடுத்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் நேற்று சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

நெல்லை அருகே உள்ள சத்திரம் புதுக்குளம் தாட்கோ காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் அருண் (வயது 34). இவர் மீது தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. உடனே அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை கமிஷனர் செந்தாமரை கண்ணன் ஏற்று அருணை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அருண் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை தச்சநல்லூர் போலீசார் நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com