கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு


கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2021 3:22 PM IST (Updated: 7 Aug 2021 3:22 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (வயது 59). இவர் பெரியார் நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று மாலை செல்வராஜின் மனைவி தேவிகா (55) என்பவர் கோட்டக்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக அப்பகுதியில் நடந்து வந்தார். அப்போது அங்கு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவர், அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி விட்டார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமியை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story