திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Aug 2021 7:43 PM IST (Updated: 7 Aug 2021 7:43 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 47 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 47 பேருக்கு தொற்று உறுதியானது. 

மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 545 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை மாவட்டத்தில் 52 ஆயிரத்து 388 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 51 ஆயிரத்து 204 பேர் குணமடைந்து உள்ளனர். 639 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story