குண்டடம் வாரச்சந்தையில் ஆடு,கோழிகள் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.


குண்டடம் வாரச்சந்தையில் ஆடு,கோழிகள்  விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
x
தினத்தந்தி 7 Aug 2021 9:36 PM IST (Updated: 7 Aug 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

குண்டடம் வாரச்சந்தையில் ஆடு,கோழிகள் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

குண்டடம்:
 குண்டடம் வாரச்சந்தையில் ஆடு,கோழிகள்  விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இதுகுறித்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
குண்டடம் வாரசந்தை
சனிக்கிழமை தோறும் கூடும் குண்டடம் வாரச்சந்தைக்கு ஆடு, கோழிகளை குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம், பல்லடம், பொங்கலூர், கர்நாடக உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இங்கு ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.
ஆடி அமாவாசை
இன்று (ஞாயிற்றுக்கிழமை)ஆடி அமாவாசை என்பதால் இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை குறைவாக இருக்கும் என்பதால் வாங்கும் வியாபாரிகள் அக்கறை காட்டாததால் ஆடு -கோழிகள் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. மேலும் ஆடி மாதம் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள், திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளர்கள் வருடந்தோறும் கருப்பண்ண சாமி கோவில்கள், குலதெய் சாமி கோவில்களில் கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். 
இதனால் ஆடி கழுவாடி நாட்கள் என்பதால் கருப்பு நிற வெள்ளாட்டு கிடாய்கள் மட்டும் நல்ல விலைக்கு விற்பனையானது. கடந்த வாரம் இறைச்சிக்காக வாங்கப்படும் 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ.6ஆயிரத்து 500க்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.4ஆயிரத்து 500-க்கு விலைபோயுள்ளது. ரூ.13 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையானது.
விலை வீழ்ச்சி
இந்த வாரம் கோழிகள் மற்றும் சண்டையிடும் சேவல்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இறைச்சிக்கு விற்கும் கோழிகள் சேவல்கள் கடந்த வராம் 1 கிலோ ரூ.500 முதல் ரூ.530 வரை விலைபோனது. ஆனால் இந்த வாரம் 1 கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விலைபோனது.
 நல்ல தரமான கட்டுச்சேவல்கள் சிறப்பாக சண்டை போடக்கூடியது கடந்த வாரம் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.4ஆயிரத்து வரை விற்பனையானது. ஆனால் அதிக சண்டை சேவல்கள் விற்பனைக்கு வந்ததால் இந்த வாரம் ரூ1,500 முதல் ரூ.3ஆயிரம் வரை மட்டுமே விற்பனையானது. ஆடு, கோழிகள் விலை கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் கவலைடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

Next Story