திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ஆண்டு முழுவதும் வேலைக்கு வருகிற ஓவர்லாக் டெய்லருக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என விளம்பர பதாகை திருப்பூரில் வைக்கப்பட்டுள்ளது


திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ஆண்டு முழுவதும் வேலைக்கு வருகிற ஓவர்லாக் டெய்லருக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என விளம்பர பதாகை திருப்பூரில் வைக்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 7 Aug 2021 10:02 PM IST (Updated: 7 Aug 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ஆண்டு முழுவதும் வேலைக்கு வருகிற ஓவர்லாக் டெய்லருக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என விளம்பர பதாகை திருப்பூரில் வைக்கப்பட்டுள்ளது

திருப்பூர்
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ஆண்டு முழுவதும் வேலைக்கு வருகிற ஓவர்லாக் டெய்லருக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என விளம்பர பதாகை திருப்பூரில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர பதாகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
விளம்பர பதாகை 
திருப்பூரில் ஆடை தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த தொழிலை ஏராளமானவர்கள் தேர்ந்தெடுத்து செய்து வருகிறார்கள். திருப்பூரில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழக தொழிலாளர்கள் 5 லட்சம் பேரும், வடமாநில தொழிலாளர்கள் 3 லட்சம் பேரும் அடங்குவார்கள். 
இருப்பினும் நாளுக்கு நாள் திருப்பூரில் நிறுவனங்கள் புதிது, புதிதாக தொடங்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக வேலை தேடி வருகிறவர்களுக்கு உடனே வேலையும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தொழிலாளர்கள் பற்றாக்குறை தீர்ந்தபாடில்லை. இதனால் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆட்கள் தேவை விளம்பர பதாகை அதிகளவு வைக்கப்பட்டு வருகிறது.  
தங்க மோதிரம் 
இதற்கிடையே ஓவர்லாக் டெய்லர் தேவை என வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ள ஒரு விளம்பர பதாகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் அவினாசி ரோட்டில் ஒரு மரத்தில் ஓவர்டாக் டெய்லர் தேவை. வருடம் முழுவதும் வருபவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும் விளம்பர பதாகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.  
திருப்பூரில் மற்ற வேலைக்கு கூட ஆட்கள் கிடைத்து விடும். 
ஆனால் டெய்லர்களுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் டெய்லர்களை கவரும் வகையில் இதுபோன்ற விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வேலைக்கு வருகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படும். மது வழங்கப்படும் என்பது உள்பட வித்தியாசமான விளம்பர பதாகைகள் மாநகரில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story