வயலில் அம்மன் சிலை கண்டெடுப்பு
திருமயம் அருகே வயலில் மண் தோண்டும் போது அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருமயம், ஆக.8-
திருமயம் அருகே வயலில் மண் தோண்டும் போது அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
அம்மன் சிலை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பாப்பா வயல் கிராமத்தை சேர்ந்தவர் செம்பையா. இவருக்கு சொந்தமான வயலில் கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இதனையடுத்து தற்போது, மழை பெய்து வருவதால் விவசாயம் செய்வதற்காக வயலில் உள்ள கருவேல மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
இந்தநிலையில் ஒரு மரத்தை தோண்டி எடுத்த போது, வித்தியாசமாக சத்தம் கேட்டது. அப்போது மண்ணை தோண்டி பார்த்தபோது ஒரு சிலை இருப்பது கண்டறியப்பட்டது.
அம்மன் சிலை
இது குறித்து வயலின் உரிமையாளர் திருமயம் தாசில்தார் பிரவீனா மேரியிடம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு வந்து பணியாளர்கள் உதவியோடு மண்ணில் புதைந்திருந்த சிலையை தோண்டி எடுத்தார். மேலும் வேறு சிலைகள் உள்ளதா என ஆய்வு செய்தார்.
முதல்கட்ட விசாரணையில் கண்டெடுக்கப்பட்ட சிலை பல நூறு ஆண்டு பழமையான அம்மன் சிலை எனவும், 2 அடி உயரம கொண்ட ஐம்பொன் சிலை என தெரியவந்துள்ளது. மேலும் இது பற்றி தாசில்தார் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story