சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு


சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2021 1:14 AM IST (Updated: 8 Aug 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் கவனமாக செல்ல வாகன ஓட்டிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர், முதுமலை பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சியாக காணப்பட்ட வனங்கள், பசுமையாக காட்சியளிக்கிறது. மேலும் காட்டுயானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் தென்படுகிறது. இதன் காரணமாக கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் முதுமலையில் இருந்து தெப்பக்காடு வழியாக கூடலூர் மற்றும் மசினகுடிக்கு செல்லும் சாலைகளிலும் காட்டுயானைகள், மான்கள், மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

கொரோனா பரவலால் முழு ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில், முதுமலை சாலைகளில் சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அதில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து,  முதுமலை சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், சாலைகளில் வாகனங்களை வேகமாக இயக்கக்கூடாது என்று வனத்துறையினர், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர். தொடர்ந்து வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை புகைப்படம் எடுத்தல், அவைகளை தொந்தரவு செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. 

அவ்வாறு தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து அதிக தொகை அபராதமாக வசூலிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story