சமையல் செய்தபோது தீக்காயமடைந்த ஆசிரியை சாவு


சமையல் செய்தபோது தீக்காயமடைந்த ஆசிரியை சாவு
x
தினத்தந்தி 8 Aug 2021 2:10 AM IST (Updated: 8 Aug 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

சமையல் செய்தபோது தீக்காயமடைந்த ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தை சேர்ந்தவர் டேவிட். இவருடைய மனைவி சலோமி(வயது 54). இவர் அரும்பாவூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் தனது வீட்டில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது. இதில் தீக்காயமடைந்த சலோமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Related Tags :
Next Story