கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை

பெரம்பலூரில் கொரோனாவுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.
கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11,579 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11,245 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 109 பேரில் 14 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 225 பேர் பலியாகி உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com