கொங்கணாபுரத்தில் ரூ.2½ கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.2½ கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது
எடப்பாடி,
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். மொத்தம் 1,300 மூட்டைகள் ஏலம் விடப்பட்டன. இதில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 900 முதல் ரூ.10 ஆயிரத்து 99 வரையிலும், பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 589 முதல் ரூ.8 ஆயிரத்து 249 வரையிலும் என மொத்தம் ரூ.2 கோடியே 65 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
இதே போல வெள்ளை எள் கிேலா ரூ.80.90 முதல் ரூ.105.20 வரையிலும், சிகப்பு எள் கிலோ ரூ.79.20 முதல் ரூ.100.40 வரையிலும் மொத்தம் ரூ.3 லட்சத்துக்கு விற்பனையானது.
Related Tags :
Next Story