பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
ஆலங்குளம் அருகே பெண்ணிடம நகை பறிக்க முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காளாத்திமடத்தை சேர்ந்தவர் முருகன். இவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே இரும்பு கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பாப்பா (55). இவர் நேற்று மாலை கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்தபோது, அங்கு குளத்து கரையில் பதுங்கி இருந்த வாலிபர் ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார்.
உடனே பாப்பா கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்து கடையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மருதம்புத்தூரை சேர்ந்த செல்வம் மகன் அருண்பாண்டியன் (26) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story