வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

வீரவநல்லூரில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
Published on

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் கிளாக்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 56). தையல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை அம்பை & பாளையங்கோட்டை சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் சந்திரசேகர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான தூத்துக்குடி ராஜகோபால் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் ஜெய மாரியப்பன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேரன்மாதேவியை சேர்ந்தவர் அப்துல் ரசாக் (83). இவர் வீரவநல்லூரில் தனியார் முதியோர் காப்பகத்தில் வசித்து வந்தார். நேற்று அதிகாலையில் அந்த பகுதியில் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அரசு பஸ் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்தும் வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com