முக்கூடல் நாராயணசாமி கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம்


முக்கூடல் நாராயணசாமி கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 8 Aug 2021 2:51 AM IST (Updated: 8 Aug 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடல் நாராயணசாமி கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கூடல்:
முக்கூடல் நாராயணசாமி கோவிலில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் போது மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரியும், இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாராயணர் பவனியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் விஷ்ணு சபையர் செய்துள்ளனர்.

Next Story