நெல்லையில் கைத்தறி கண்காட்சி

நெல்லையில் கைத்தறி தினத்தையொட்டி நேற்று கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது.
நெல்லையில் கைத்தறி கண்காட்சி
Published on

நெல்லை:

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி தினத்தையொட்டி நேற்று கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தொடங்கி வைத்தார். அப்போது நெசவாளர் நலவாழ்வு திட்ட உதவித்தொகையாக நெசவாளர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 சதவீத மானியத்துடன் 8 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும், 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், நெல்லை கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் சங்கரேசுவரி, துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர் லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com