ரூ.92 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; பீடா கடைக்காரர் கைது


ரூ.92 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; பீடா கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2021 7:16 AM IST (Updated: 8 Aug 2021 7:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கோட்டை பகுதியில் ரூ.92 ஆயிரம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பீடா கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.


மலைக்கோட்டை, ஆக.8-
திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் நேற்று மாலைக்கோட்டைப் பகுதியில் உள்ள நடு குஜிலி தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பீடா கடையில் புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை செய்தனர்.  அப்போது ரூ.92 ஆயிரத்து 250 மதிப்புள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களையும், அதை விற்பனை செய்த பணம் ரூ.19 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சின்ன கம்மாளத்தெருவை சேர்ந்த அந்த கடையின் உரிமையாளர் அன்புதாசனையும் (வயது 58) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story