செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவிலில் கருணாநிதி நினைவுநாள் அனுசரிப்பு
செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவிலில் கருணாநிதி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
செங்கல்பட்டு,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி செங்கல்பட்டில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. மலர் தூவி அஞ்சலி செலுத்தி 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் நகர செயலாளர் நரேந்திரன். முன்னாள் நகரமன்ற தலைவர் அன்புச் செல்வன். ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சிங்கப்பெருமாள் கோவில் பகுதி செயலாளர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சி.எம்.கதிரவன் முன்னிலை வகித்தனர். இதில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் ஒன்றிய பிரதிநிதி பாஸ்கர், கிளை செயலாளர்கள் சையத், சண்முகம், துலுக்கானம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திருத்தேரி, பாரேரி உள்ளிட்ட 12 வார்டுகளிலும் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் 86 பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கினர். இதில் வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி, முன்னாள் வார்டு உறுப்பினர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோல அஞ்சூர் ஊராட்சி புது கிராமத்தில் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் வி.ராஜேந்திரன் தலைமையில் 9 வார்டுகளிலும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதில் கிளை செயலாளர்கள் சங்கர், வெங்கடேசன், கன்னியப்பன், கனேஷ், ரவி, ஜெய்சங்கர், ருக்மாங்கதன், டில்லிபாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. உத்தரவின்பேரில் சித்தாமூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, சிற்றரசு ஆகியோர் தலைமையில் சித்தாமூர், கிழக்கு, மேற்கு ஒன்றிய ஊராட்சியில் தி.மு.க. கொடியை ஏற்றி கருணாநிதி உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், ஜனனி ராஜா கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. அரசு, நெசவாளர் அணி பொறுப்பாளர் பொன்.முருகானந்தம், முன்னாள் ஒன்றிய செயலாளர் தனசேகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் நிர்மல் குமார் மற்றும் நிர்வாகிகள் நாகப்பன், அன்பழகன், காத்தமுத்து, முனுசாமி, வன்னியநல்லூர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story