36 வருடங்களுக்கு பிறகு ஊட்டி நகராட்சியை திமுக கைப்பற்றியது


36 வருடங்களுக்கு பிறகு ஊட்டி நகராட்சியை திமுக கைப்பற்றியது
x
தினத்தந்தி 22 Feb 2022 10:41 PM IST (Updated: 22 Feb 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

36 வருடங்களுக்கு பிறகு ஊட்டி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதில் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.

ஊட்டி

36 வருடங்களுக்கு பிறகு ஊட்டி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதில் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர். 

ஊட்டி நகராட்சி

ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 198 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதற்காக 9 மேஜைகள் போடப்பட்டு, 9 சுற்றுகளாக எண்ணப்பட்டது. 

இதில் தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. வேட்பாளர்கள் பலர் முன்னிலையில் இருந்தனர். மொத்தத்தில் 20 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று ஊட்டி நகராட்சியை தனதாக்கியது. அதுபோன்று தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

36 வருடங்களுக்கு பிறகு

இது தவிர அ.தி.மு.க. 7 இடங்களிலும், சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். கடந்த 1986-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஊட்டி நகராட்சியை கைப்பற்றியது. அதன் பின்னர் தி.மு.க. வெற்றி பெற்றாலும் காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு முறை ஒதுக்கப்பட்டது. இதனால் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க.வால் கைப்பற்ற முடியவில்லை. 

தற்போது வெற்றி பெற்று இருப்பதால் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக தி.மு.க.வினர் மகிழ்ச்சியில் உள்ளனர். 

ஊட்டி நகராட்சியில் வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:- 

வார்டு-1

பதிவான வாக்குகள்-1,232
1.உமா நித்திய சத்தியா (காங்கிரஸ்) -638 வெற்றி
2.கனகமணி (அ.தி.மு.க.) -159
3.பூர்ணிமா (பா.ஜ.க.) -52

வார்டு-2

பதிவான வாக்குகள்-1,073
நாகமணி (தி.மு.க.) -672 வெற்றி
சாந்திமதி (சுயே)- 140 

வார்டு-3

பதிவான வாக்குகள்-1,302
1.கவுரம்மா (தி.மு.க) -335
2.ஜெயலட்சுமி (அ.தி.மு.க.) -668 வெற்றி 
3.விஜயகுமாரி (பா.ஜ.க.) -59

வார்டு-4

பதிவான வாக்குகள்-1,118
1.அனிதா லட்சுமி (தி.மு.க.) -605 - வெற்றி
2.பத்மபிரியா (அ.தி.மு.க.) -145
3.பிலோமினா (பா.ஜ.க.) -48
4. கு.பானுபிரியா (நாம் தமிழர் கட்சி) -25

வார்டு-5

பதிவான வாக்குகள்-1,244
1. விஷ்ணு பிரபு (தி.மு.க.) -421-வெற்றி
2. சார்லஸ் (அ.தி.மு.க.) -206
3. பஷீர் அகமது (பா.ம.க.) -2
4. ராமகிருஷ்ணன் (பா.ஜ.க.) -31

வார்டு-6

பதிவான வாக்குகள்-1,070
1. வனித்தா (தி.மு.க.) -502 வெற்றி
2. சித்ரா (அ.தி.மு.க.) -404
3. தெய்வானை (அ.ம.மு.க.) -136
4. பானுபிரியா (நாம் தமிழர் கட்சி) -28

வார்டு-7

பதிவான வாக்குகள்-1,137
1. விசாலாட்சி (தி.மு.க.) -578 வெற்றி
2. சத்தியபாமா (அ.தி.மு.க.) -228 

வார்டு-8

பதிவான வாக்குகள்-1,104
1. குமார் (அ.தி.மு.க.) -387-வெற்றி
2. சம்பத்குமார் (பா.ஜ.க) -28
3. வெங்கடேஷ் (தி.மு.க.) -151

வார்டு-9

பதிவான வாக்குகள்-1,191
1. கே.நாகராஜ் (காங்கிரஸ்) -644- வெற்றி
2. அருண்குமார் (பா.ஜ.க.) -145
3. சுதாகர் (அ.தி.மு.க.) -253 
4. பி.நாகராஜ் (நாம் தமிழர் கட்சி) -97

வார்டு-10

பதிவான வாக்குகள்-1,511
1.அபுதாஹீர் (தி.மு.க.) -599-வெற்றி
2. விசாந்த் (அ.தி.மு.க.) -449
3. சிவக்குமார் (பா.ம.க.) -44
4. நசரேத் (அ.ம.மு.க) -25

வார்டு-11

பதிவான வாக்குகள்-1,312
1. தம்பி இஸ்மாயில் (தி.மு.க.) -568-வெற்றி
2. சையத் அபிப் (அ.தி.மு.க.) -48

வார்டு-12

பதிவான வாக்குகள்-1,249
1.அக்கிம் பாபு (அ.தி.மு.க.) -829 வெற்றி
2. வின்சென்ட் (காங்கிரஸ்) -307
3. நாதன் (அ.ம.மு.க.) -113

வார்டு-13

பதிவான வாக்குகள்-1,031
1. எஸ்.நாதன் (காங்கிரஸ்) -362-வெற்றி
2. ஜலேந்திரன் (அ.தி.மு.க.) -195
3. ராஜேந்திரன் (பா.ஜ.க.) -126

வார்டு-14

பதிவான வாக்குகள்-661
1. ஜார்ஜ் (தி.மு.க.) -416-வெற்றி
2. வில்லியம் பேட்ரிக் (அ.தி.மு.க.) -120

வார்டு-15

பதிவான வாக்குகள்-1,170
1. அன்புசெல்வம் (அ.தி.மு.க.) -405 வெற்றி
2. ஷனவாஸ் (தி.மு.க.) -262

வார்டு-16

பதிவான வாக்குகள்-796
1. புளோரினா (சுயேச்சை வேட்பாளர்) -357 வெற்றி
2. பிரேமா ரவி (தி.மு.க.) -222
3. மகாலட்சுமி (அ.தி.மு.க.) -152
4. ரோஷன் (பா.ஜ.க.) -65

வார்டு-17

பதிவான வாக்குகள்-1004
1. ரஜினிகாந்த் (காங்கிரஸ்) -355 வெற்றி
2. சண்முகம் (அ.தி.மு.க.) -279
3. சுதாகர் (பா.ஜ.க.) -45

வார்டு-18

பதிவான வாக்குகள்-1,317
1. முஸ்தபா (தி.மு.க.) -559-வெற்றி
2. விஸ்வநாத் (பா.ஜ.க.) -135
3. கே.சண்முகம் (அ.தி.மு.க.) -65

வார்டு-19

பதிவான வாக்குகள்-1,317
1. சுருதி கிருஷ்ணா (அ.தி.மு.க.) -625-வெற்றி
2. ரகமத்துல்லா (தி.மு.க.) -501
3. அனிதா (பா.ஜ.க.) -115

வார்டு-20

பதிவான வாக்குகள்-1,154
1. ரீட்டா (தி.மு.க.) -600 வெற்றி
2. சந்தியா (அ.தி.மு.க.) -364

வார்டு-21

பதிவான வாக்குகள்-988
1. வாணீஸ்வரி (தி.மு.க.) -384 வெற்றி 
2. பாமா நந்தகுமார் (அ.தி.மு.க.) -343
3. தீபா (பா.ஜ.க.) -93

வார்டு-22

பதிவான வாக்குகள்-1,131
1. ரவிக்குமார் (தி.மு.க.) -669-வெற்றி
2. நாகராஜன் (பா.ஜ.க.) -44
3. ஜெயசந்திரன் (அ.தி.மு.க.) -34

வார்டு-23

பதிவான வாக்குகள்-1,348
1. மேரி பிளாரினா (தி.மு.க.) -599 வெற்றி 
2. பிரமிளா (அ.தி.மு.க.) -243

வார்டு-24

பதிவான வாக்குகள்-1,028
1.திவ்யா (தி.மு.க.) -280 வெற்றி
2. ரேணுகாதேவி (பா.ஜ.க.) -96
3. பார்வதி (அ.தி.மு.க.) -25 

வார்டு-25

பதிவான வாக்குகள்-1,113
1. கீதா (தி.மு.க.) -622 வெற்றி 
2.ஷர்மிளா தேவி (அ.தி.மு.க.) -312
3. உமா மகேஸ்வரி (பா.ஜ.க.) -46

வார்டு-26

பதிவான வாக்குகள்-933
1.  பிரியா வினோதினி (தி.மு.க.) -445 -வெற்றி 
2. அமுதா (அ.தி.மு.க.) -85 
3. சரோஜினி (நாம் தமிழர் கட்சி) -67

வார்டு-27

பதிவான வாக்குகள்-1,192
1. ஜெயலட்சுமி (காங்கிரஸ்) -422 வெற்றி 
2. லட்சுமி (அ.தி.மு.க.) -302

வார்டு-28

பதிவான வாக்குகள்-1,093
1. தனலட்சுமி (அ.தி.மு.க.) -555 வெற்றி
2. மோகனா (தி.மு.க.) -538

வார்டு-29

பதிவான வாக்குகள்-1,104
1. ராஜேஸ்வரி (காங்கிரஸ்) -436 வெற்றி
2. சி.லட்சுமி (அ.தி.மு.க.) -340

வார்டு-30

பதிவான வாக்குகள்-910
1. மீனா (தி.மு.க.) -501 வெற்றி
2. வசந்தகுமாரி (அ.தி.மு.க.) -409

வார்டு-31

பதிவான வாக்குகள்-1,325
1.  ரவி (தி.மு.க.) -463 வெற்றி 
2. சுரேஷ்குமார் (அ.தி.மு.க) -342

வார்டு-32

பதிவான வாக்குகள்-978
1. செல்வராஜ் (தி.மு.க.) -456 வெற்றி
2. தனசெழியன் (அ.தி.மு.க.) -234

வார்டு-33

பதிவான வாக்குகள்-1,246
1. சகுந்தலா (அ.தி.மு.க.) -563 வெற்றி
2. ஜெயசக்தி (தி.மு.க.) -519 
3. ஜெரோசா (நாம் தமிழர் கட்சி) -19

வார்டு-34

பதிவான வாக்குகள்-797
1.  ரகுபதி (தி.மு.க.) -306 வெற்றி
2. பழனிசாமி (அ.தி.மு.க.) -207

வார்டு-35

பதிவான வாக்குகள்-1,953
1. ரமேஷ் (சுயேச்சை) -761 வெற்றி
2. மாதேவன் (தி.மு.க.) 650
3. கனகராஜ் (நாம் தமிழர் கட்சி) -97
4. ஆறுமுகம் (அ.தி.மு.க.) -68
5. கண்ணன் (பா.ம.க.) 39

வார்டு-36

பதிவான வாக்குகள்-1,426
1. கஜேந்திரன் (சுயேச்சை) -532 வெற்றி
2. வெங்கடேஷ் (தி.மு.க.) -486
3. கிருஷ்ணராஜ் (அ.தி.மு.க.) -137
4. மாசிலாமணி (நாம் தமிழர் கட்சி) -43
5. ராஜி (பா.ம.க.) -33

சுயேச்சை வேட்பாளர்கள்

ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகளில் தி.மு.க. 20 இடங்கள், அ.தி.மு.க. 7 இடங்கள், காங்கிரஸ் 6 இடங்கள், சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி பெற்றனர்.

 கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஊட்டி நகராட்சியை தக்க வைத்தது. தற்போது தி.மு.க. கைப்பற்றி உள்ளது.  மேலும் 16-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் புளோரினா தி.மு.க. பிரமுகரின் மனைவி. தனக்கு சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டார்.

 35-வது வார்டில் தி.மு.க.வை சேர்ந்த ரமேஷ் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 36-வது வார்டில் வியாபாரியான கஜேந்திரன் (வயது 36) முதல் முறை சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story